திங்கள், 5 ஜூலை, 2021

தமிழக அரசின் அருமையான திட்டம்

 📢

🔊



*தமிழக அரசின் அறிவிப்பான குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் ரூபாய் 1000/- வழங்கும் திட்டம் எந்த வகை ரேசன் கார்டுக்கு கிடைக்கும் !? கிடைக்காது.!?*


 பலர் குடும்பத் தலைவர் பெயர் உள்ள கார்டுகளை குடும்பத் தலைவி பெயரை மாற்ற ஏராளமான விண்ணப்பங்கள் உணவுப் பொருள் விநியோகத் துறைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுமட்டுமல்லாமல் இதுவரை ரேஷன் கார்டே இல்லாதவர்கள் கூட ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்து வருகிறார்கள்.


*ரூ 1000*

 

ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவி இருந்தால் மட்டும்தான் இந்த 1000 ரூபாய் கிடைக்குமா, இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழகத்தில் உபயோகத்தில் இருக்கும் ஸ்மார்ட் கார்டுகளில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் இருக்கின்றன.


*முறைகேடுகள்*

 

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இந்த குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். 


          *அது போல்*


PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம்.

 

NPHH என இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். 


NPHH-S என இருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். 


NPHH-NC என இருந்தால் எந்த பொருளும் கொடுக்கப்படமாட்டாது. ரேஷன் கார்டை ஒரு அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


*யாருக்கெல்லாம் கிடைக்கும்! கிடைக்காது! .*

 

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 1000 ரூ திட்டம் 

*NPHH-S,  NPHH-NC* 

என்ற குறியீடு போட்டுள்ள கார்டுகளுக்கு மட்டும் கிடைக்காது. 

மற்ற குறியீடுகளுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே யாரும் தேவையின்றி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 அமேசான் பிரைம் டே சேல் 2021 இந்த நாளிலிருந்து தொடங்குகிறது, கேஷ்பேக், தள்ளுபடிகள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்  08 ஜூலை 2021,  அம...